'பெண் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி "ஜுன்மோனி ரபா" விபத்தில் உயிரிழப்பு!

#India #Death #Police #Accident #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
'பெண் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி "ஜுன்மோனி ரபா" விபத்தில் உயிரிழப்பு!

கவுகாத்தி,

30 வயதான ஜுமோனி ரூபா, அசாமின் நகோன் மாவட்டத்தில் அமைந்துள்ள மோரிகோலாங் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். ஜுமோனியின் வருங்கால கணவர் மோசடி வழக்கு தொடர்பாக அவரால் கைது செய்யப்பட்டார். மேலும், குற்றவாளிகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து 'பெண் சிங்கம்' என பெயர் பெற்றார். அதேவேளை, இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜுமொனி ரூபா நேற்று அதிகாலை சாலை விபத்தில் உயிரிழந்தார். ரூபா நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தனது காரில் சஹ்குயா என்ற கிராமப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் வேகமாக வந்த லாரி ரூபா சென்ற காரில் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4